தமிழகம்

போலீஸாரின் அத்துமீறலைக் கண்டு அஞ்சமாட்டோம்: கலிங்கப்பட்டி போராட்டத்தில் வைகோ உறுதி

செய்திப்பிரிவு

‘போலீஸாரின் அத்துமீறலைக் கண்டு அஞ்சமாட்டோம்’ என்று, வைகோ தெரிவித்தார்.

கலிங்கப்பட்டியில் போராட்டத்தின் போது பேசிய வைகோ, ‘மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசு பிடிவாதமாக இருக்கிறது.

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும். போலீ ஸாரின் அத்துமீறலைக் கண்டு அஞ்சமாட்டோம். இங்கே உயிர் போனாலும் பரவாயில்லை. சொந்த ஊரில் உயிர்விடுவதை பெருமையாக நினைக்கிறேன். போலீஸ் படையை விலக்கி கொள்ள வில்லை எனில், தமிழகம் முழுவதும் இருந்து மதிமுக தொண்டர்களை அழைக்க வேண்டிய நிலை வரும்’ என்றார் அவர்.

திருமாவளவன் பேச்சு

திருமாவளவன் பேசும்போது, ‘அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீ ஸார் கண்மூடித்தனமாக தாக் குதல் நடத்தியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. இங்கே குவிக்கப்பட்டுள்ள போலீஸாரை உடனே வாபஸ் பெற வேண்டும்’ என்றார் அவர்.

திருநெல்வேலி சரக டிஐஜி எஸ்.முருகன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் வைகோவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, கலிங்கப்பட்டியில் இருந்து போலீஸாரை விலக்கி கொள்வதாக டிஐஜி உறுதி யளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட வைகோ சம்மதித்தார். மேலும், பொதுமக்களை கலைந்து போகுமாறு கேட்டுக் கொண் டார்.

டாஸ்மாக் கடையை சூறை யாடியது தொடர்பாக போலீஸார் பெயர் குறிப்பிடும் நபர்கள் கைதாகிவிடுவோம் எனவும் வைகோ உறுதியளித்தார்.

இதையடுத்து கலிங்கப்பட்டியில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

கலிங்கப்பட்டியில் பொதுமக்களுடன் இணைந்து வைகோ, திருமாவளவன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT