தமிழ்நாட்டைச் சார்ந்த இயற்கை யோகா மருத்துவர் காமராஜ், லண்டனைச் சார்ந்த எனோலியஸ் ஜெ ஆடமை காதலித்து, திருமணம் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தட்ரஹள்ளி கிராமத்தைச் சார்ந்தவர் காமராஜ். இயற்கை யோகா அறிவியல் படித்த காமராஜ் இயற்கை யோகா மருத்துவராக கேரளாவில் பணிபுரிகிறார்.
காமராஜ் ஆறு மாதங்கள் கேரளாவிலும், 3 மாதங்கள் லண்டனிலும் பணிபுரிவது வழக்கம். லண்டனில் பணிபுரியும்போது 2007 டிசம்பர் மாதம் ஒரு சர்ச்சில் எனோலியஸ் ஜெ ஆடம்மை சந்தித்தார். அந்த சந்திப்பு காதலாக மாறியது.
எனோலியஸ் ஜெ ஆடம்மின் பெற்றோர் லண்டனில் வாழ்ந்து வந்தாலும், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். 60 ஆண்டுகள் இணைபிரியாத மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதனால், காமராஜ் - எனோலியஸ் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். உறவினர்கள் மட்டுமே தயக்கம் காட்டிய நிலையில் அவர்களையும் காதலர்கள் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஐகொண்டம் வெங்கடேச பெருமாள் கோவிலில் காமராஜூக்கும், எலோனியஸுக்கும் நேற்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடந்தது.
எலோனியஸ் சார்பில் லண்டனைச் சார்ந்த 25 பேர் திருமணத்துக்கு வந்து தம்பதிகளை வாழ்த்தியுள்ளனர்.
''எங்கள் மகளை புடவையில் பார்ப்பதை பெருமையாக நினைக்கிறோம்'' என்று நெகிழ்கின்றனர் எலோனியஸ் பெற்றோர்.