கூடல்நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

மதுரையில் மதுபானங்கள் திருடு போவதை தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் மதுரை மாவட்டம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் அரசின் உத்தரவுப்படி, கடந்த 7-ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் உயர் நீதிமன்ற உத் தரவின்படி கடந்த 9-ம் தேதி கடை கள் மீண்டும் அடைக்கப்பட்டன.

இந்நிலையில் ஏற்கெனவே கப்பலூர், மணலூர் டாஸ்மாக் குடோன்களில் இருந்து கடை களுக்கு கொண்டு செல்லப்பட்ட மது பாட்டில்கள் விற்றது போக மீதம் உள்ள மது பாட்டில்கள் கடைகளில் இருப்பு வைக்கப் பட்டுள்ளன.

இவற்றை யாரும் திருடிவிடக் கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு கடைக்கும் சுழற்சி முறையில் 2 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டாஸ் மாக் கடை திறப்பு வழக்கு விசா ரணை முடியும் வரை கடைகளுக் குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரி வித்தனர்.

SCROLL FOR NEXT