பிரதிநிதித்துவ படம். 
தமிழகம்

சென்னையில் கரோனா அதிகம் பாதித்த பகுதியானது மீண்டும் ராயபுரம் மண்டலம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் 6, 535 பேர் பாதிப்படைந்து உள்ளனர். 1,824 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

நேற்று 4 பேர் பலியான நிலையில், இன்று ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. ராயபுரத்தில் இன்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ராயபுரத்தில் இதுவரை 571 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து முதல் இடத்தில் இருந்த கோடம்பாக்கம் 2வது இடத்திற்கு சென்றுள்ளது.

ராயபுரம், கோடம்பாக்கம் (563) மற்றும் திரு.வி.க. நகர் (519) ஆகியவற்றில் அதிக எண்ணிக்கை உள்ள சூழலில், அவை கருஞ்சிவப்பு மண்டலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 760 பேர் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். 1,500 பேர் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில் ஆண்கள் 62.79 சதவீதமும், பெண்கள் 37.18 சதவீதமும் மற்றும் திருநங்கைகள் 0.03 சதவீதமும் உள்ளனர். சென்னையில் இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT