திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 தோல் தொழிற்சாலைகள் அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 45நாட்களாக தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.தமிழகத்தில் தற்போது கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்ப்பட்டுள்ள நிலையில் தோல் தொழிற்சாலைகள் குறைந்த பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி நகரங்களில் சில தளர்வுகளைமாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவித்துள்ளார்.
இந்தப் பகுதிகளில் தோல் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் 46 ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 30 சதவீத பணியாளர்களுடன் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொழிற்சாலை இயங்கும். அரசின் இந்த நடவடிக்கையால் தோல் சார்ந்த பொருட்கள் உற்பத்தி சில மாதங்களில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.