தமிழகம்

11 லட்சம் ‘பிசிஆர் கிட்’களுக்கு தமிழக அரசு ஆர்டர்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரிசோதனைக் காக தமிழக அரசு பல்வேறு நாடு களில் இருந்து 11 லட்சம் ‘பிசிஆர் கிட்’களை கொள்முதல் செய்கிறது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவமனைகள், 16 தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.

அதிகமானோருக்கு பரிசோதனை

இதுவரை, 2.30 லட்சம் பரிசோத னைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தினமும் 14 ஆயிரம் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இன்னும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதால், 11 லட்சம் ‘பிசிஆர் கிட்’களுக்கு தமிழக அரசு பல்வேறு நாடுகளில் ஆர்டர் கொடுத்தது. இதில், முதல்கட்டமாக தென்கொரியாவில் இருந்து 1 லட்சம் ‘பிசிஆர் கிட்’கள் ஓரிரு நாளில் சென்னைக்கு வரவுள்ளன.

SCROLL FOR NEXT