செப்டம்பர் 2-ம் தேதி நடக்கவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 20 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரை பாண்டியன், சென்னையில் நிருபர் களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
முந்தைய காங்கிரஸ் கூட்டணி கடைபிடித்த அதே பொருளாதாரக் கொள்கைகளை பாஜக தலைமை யிலான அரசு மிக மூர்க்கத்தனமாக கடைபிடித்து வருகிறது. விலைவாசி கட்டுக்குள் அடங்காமல் உயர்ந்து கொண்டிருக்கிறது. தொழிற் சாலைகள் மூடல் அதிகரித்துள்ளது. அந்நிய மூலதனம் என்ற பெயரில் பாதுகாப்பு, ரயில்வே துறை களை தனியாருக்கு தாரை வார்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தபால் துறையை போஸ்டல் வங்கி, போஸ்டல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஐந்து கார்ப்பரேட் கம்பெனிகளாகப் பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4, 5 மற்றும் 6-வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர் களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், 7-வது ஊதியக் குழுவில் 15.79 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், 7-வது ஊதியக் குழு 2014 ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஊதியக் குழு தலைவரோ 2016 ஜனவரி 1-ம் தேதி முதல்தான் அமல்படுத்தப்படும் என கூறியுள்ளார். இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அரசு அலுவலகங் களில் 6 லட்சம் காலிப் பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஆட் களை நியமிப்பதற்கு பதிலாக தனி யார் ஏஜென்சிகளிடம் பணிகள் ஒப்படைக்கப்படுகிறது. இவற்றை யெல்லாம் கண்டித்தும் புதிய ஓய் வூதிய திட்டத்தை ரத்து செய்தல், தனியார்மயத்தை கைவிடுதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தியும் செப்டம்பர் 2-ம் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம் நடக்கிறது. தமிழகத்தில் 20 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர்
இவ்வாறு துரைப்பாண்டியன் கூறினார்.