மோடி - ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவது இன்னும் தொடர்கிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவனை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே அதிமுக இளைஞர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவ பொம்மையை எரித்தும், இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.