கொலை செய்யப்பட்ட அருண்குமார். 
தமிழகம்

மதுபோதையில் தகராறு: தஞ்சாவூரில் ரவுடி வெட்டிக் கொலை

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூரில் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சகோதரர்கள் உள்பட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் கீழவாசல் பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் வசித்து வந்தவர் கனி என்கிற அருண்குமார் (37). இவர் மீது கொலை உள்பட 34 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று (மே 7) இரவு அதே பகுதியில் உள்ள தன் நண்பர் கதிர் என்பவரின் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளார். அருண்குமாருடன் கதிரின் சகோதரர் பிச்சாண்டி, முத்து ஆகியோரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

குடிபோதையில் கதிருக்கும், அருண்குமாருக்கும் இடையே வாய்த் தகாராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கதிர், பிச்சாண்டி, முத்து ஆகிய மூன்று பேரும் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அருண்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அருண்குமார் உயிரிழந்தார். இதனை அறிந்த மூன்று பேரும் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து வந்த தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் அருண்குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய சகோதரர்கள் உள்பட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட அருண்குமார், ஏற்கெனவே கொலை உள்பட 34 வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT