திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலப்பாளையத்தை சேர்ந்த 83 முதியவர் இன்று உயிரிழந்தார்.
மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த இந்த முதியவர் நேற்று இரவில் இம்மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் உயிரிழந்ததை அடுத்து அவரது வீடு அமைந்துள்ள கணேசபுரம் வடக்கு தெரு பகுதி முழுக்க சீல் வைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.
கரோனா தொற்றால் நெல்லையில் இது முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.