தமிழகம்

செல்பேசி கோபுரத்தில் ஏறி போராடிய தொழிலாளியிடம் போலீஸார் நடத்திய நாடகம்

செய்திப்பிரிவு

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நேற்று செல்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய தொழிலா ளியை நாடகமாடி போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே சுரண்டை - தட்டான்குளத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(35). கட்டிடத் தொழி லாளி. இவர் நேற்று சுந்தரபாண்டி யபுரம் வேளாண்மை கூடத்தின் பின்புறம் உள்ள 120 அடி உயர செல்பேசி கோபுரத்தில் ஏறினார். டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி கோபுரத்தின் உச்சியில் நின்றபடி கோஷ மிட்டார்.

சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கோட்டூர்சாமி தலைமையில் தீயணைப்பு படையினரும், ஆய்குடி காவல் ஆய்வாளர் ரகுராஜன் உள்ளிட்ட போலீஸாரும், ஐயப்பனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மதுக்கடை களை மூடும்வரை இறங்க மாட்டேன் என்று அவர் தெரிவித் ததால், அந்தப் பகுதியில் செயல் பட்ட மதுக்கடையைப் பூட்டி சாவியை எடுத்து வந்தனர். அதை கோபுரத்தின் மீது இருந்த ஐயப்பனிடம் காட்டினர்.

‘கடையை மூடிவிட்டோம். கீழே இறங்கி வந்தால் சாவியை ஒப்படைக்கவும் தயாராக இருக்கிறோம்’ என்று, போலீஸார் தெரிவித்தனர். ஐயப்பன் கீழே இறங்கி வந்தார். அதன்பின் அவரை போலீஸார் கைது செய்தனர். அதன்பின் மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல மது விற்பனை நடைபெற்றது.

SCROLL FOR NEXT