தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை கள் குறித்து பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்ய அதிமுக இலக்கிய அணி முடிவு செய்துள்ளது.
அதிமுக இலக்கிய அணி நிர் வாகிகள் மற்றும் மாவட்ட செயலா ளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக் கூட்டத்துக்கு சமூக நலத்துறை அமைச்சரும், இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி தலைமை தாங்கினார்.
அமைச்சர்கள் உதயகுமார், கோகுல இந்திரா, மகளிர் ஆணைய தலைவர் விசாலாட்சி நெடுஞ் செழியன், வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணி இணை செயலாளர் துரையரசன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அப்துல்கலாம் பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கடைபிடிக்கப்படும் என அறி வித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அதிமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கியும், திமுகவினரின் பொய் பிரச்சாரங்களை தோலுரித்து காட்டும் வகையிலும் தெருமுனை கூட்டங்கள், பட்டிமன்றங்கள் நடத்துவது என்பன உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.