தமிழகம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்னல் தாக்கி 2 அலகுகளில் பழுது: 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

செய்திப்பிரிவு

மின்னல் தாக்கியதில் தூத்துக்குடி அனல்மின் நிலைய 3-வது மற்றும் 4-வது அலகில் பழுது ஏற்பட்டு 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மிக பழமை யான அனல்மின் நிலையம் என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த அனல்மின் நிலைய 1-வது அலகில் 20 நாட்கள் பராமரிப்பு பணிகளுக்கு பின்னர் நேற்று முன் தினம் மதியம் 12.50 மணியளவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி யது.

இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை 7 மணி முதல் இடி மின்னலு டன் மழை பெய்தது. மின்னல் காரணமாக அனல்மின் நிலைய 3-வது மற்றும் 4-வது அலகில் திடீர் பழுது ஏற்பட்டது. அன்று இரவு 9 மணியளவில் இரண்டு அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பழுதை சீரமைக்கும் பணி யில் அனல்மின் நிலைய பொறி யாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT