காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக் குதலில் இறந்த தென்காசியைச் சேர்ந்த சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தென்காசி மாவட்டம் மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செ.சந்திரசேகர். இவர் மத்திய ரிசர்வ் காவல் படையின் 92-வது படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மே 4-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரி ழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்தை உடனடியாக வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள் ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், அமைச்சர் ராஜலட்சுமிக்கும், மாவட்ட ஆட் சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் உத்த ரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.