தமிழகம்

முதல்வரின் துணை செயலரானார் இன்னசன்ட் திவ்யா

செய்திப்பிரிவு

முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியான ஜெ.இன்னசன்ட் திவ்யா, முதல்வர் ஜெயலலிதாவின் துணை செயலராக நியமிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்ட அறிவிப்பு:

முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த ஜெ.இன்ன சன்ட் திவ்யா, முதல்வரின் துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரை, முதல்வர் தனிப்பிரிவு அதிகாரி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT