ஊரடங்கால் வீட்டில் முடங்கி யுள்ள மாணவர்களின் திறமை களை வெளிக்கொணரும் வகையில் ஏப்.2 முதல் 11-ம் தேதி வரை மதுரை மாவட்ட மாணவ ர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகளை மதுரை எம்பி சு.வெங்கடேசன் நடத்தினார்.
அதைத் தொடர்ந்து மாணவர் களின் பெற்றோருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் பங் கேற்றனர். இதில் சிறந்த 10 படைப்புகள் தேர்ந்தெடுக் கப்பட்டன. அதற்கான விவரத்தை கேரள அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
‘பொது ஊரடங்கு காலத்தில் மதுரையில் உள்ள குடும்பங்களை இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்திய மதுரை எம்பி வெங்கடேசனுக்குப் பாராட்டுகள்’ என்று தமிழிலேயே ட்விட் செய்திருந்தார்.
போட்டியில் வென்றோர் விவரம்: ஆர். நாகராசன் குணசுந்தரி, ஆர்.சங்கரி, பி.தனலெட்சுமி, ஆர். உமா ரஜினி, வி. பிரேமலதா, பி. ரமேஷ், என். சி. உமா மாரிமுத்து, எஸ். பாண்டிச்செல்வி, எம். யோகராஜ், ஏ.லீனா ஜூலியட்.
இவர்கள் அனைவரும் தலா ரூ.5000 பரிசு பெறுகின்றனர். இப்பரிசுத் தொகையை அப ராஜிதா நிறுவனம் வழங்குகிறது.