கோவையில் நேற்று வாகனப் போக்குவரத்து அதிகரித்த நிலையில், பல நாட்களுக்குப் பிறகு பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கின.
ஊரடங்கு நடைமுறையில் இருந் தாலும், அரசு அறிவித்த தளர்வு கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதி களைத் தவிர மற்ற பகுதிகளில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து, வாகனப் போக்குவரத்து அதிகரித்தது. சந்தை, வர்த்தகப் பகுதிகளில் கண் காணிப்புப் பணியில் ஈடுபட்ட போலீ ஸார், சமூக இடைவெளியை கடைப் பிடிக்குமாறு வலியுறுத்தினர்.
பல பகுதிகளில் ரோந்துப் பணி யில் ஈடுபட்ட போலீஸார், கிராஸ் கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் தடையை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடும்படி ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களுக்கு அச்சமில்லை
சேலத்தில் கரோனா தொற்று அச்ச மின்றி பொதுமக்கள் சமூக இடை வெளியை மறந்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக நெரிசலுடன் வாகனங்களில் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு முழுமையாக விலக்கப் பட்டதைப்போல, பொதுமக்கள் நேற்று இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் சாலைகளில் சென்றனர்.
குறிப்பாக, அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு, நான்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக போக்குவரத்து காணப்பட்டது. கரோனா தொற்று அச்சம் துளியு மின்றி, மக்கள் சமூக இடை வெளியை மறந்து, பொது இடங் களில் நடமாடியதால், கரோனா தொற்று அதிகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே, வரும் நாட்களில் அதிகாரிகள் தேவையின்றி சுற்றித் திரியும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் குழப்பம்
கரோனா பாதிப்பில் ஆரஞ்சு மண்டலத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளது. நேற்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், அதிகாலை முதலே சாலைகள் வாகனப் போக்குவரத்தால் நிரம்பியது. பேக்கரி, பார்சல் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள உணவ கங்கள், செல்போன் கடைகள், எலக்ட்ரிக் கடைகள், கணினி சேவை கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்பனையகங்கள் திறக்கப்பட்டன.
ஏசி பழுதுபார்ப்பு கடை, மின் சாதனங்கள் பழுதுபார்ப்பு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட வில்லை. அதேபோல, ஆட்டோ கன்சல்டன்சி கடைகளை மூடுமாறு போலீஸார் எச்சரித்து மூட வைத்த னர்.
மதுக்கடைகள் திறப்பு
கர்நாடக மாநிலத்தில் மதுக்கடைகள் நேற்று முதல் திறக்க அனுமதிக்கப்பட்டது. தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ள புளிஞ்சூர், தாளவாடியை அடுத்த தாளவாடி எல்லக்கட்டை, சிக்காலோ ஆகிய இடங்களில் கர்நாடக மாநில மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. தாளவாடி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்.
கர்நாடக மதுபாட்டில்கள் தமிழகத்துக்குள் கொண்டு வரப்படுவதைத் தடுக்க தாளவாடி, ஆசனூர், பண்ணாரி ஆகிய இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
தருமபுரியில் கடைகளுக்கு சீல்
ஊரடங்கு விதிகளில் வழங்கப் பட்ட தளர்வால் பொதுமக்கள் ஒரே இடங்களில் அதிக அளவில் திரளுவதை தடுக்கும் வகையில், வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பினரை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த தருமபுரி ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் கூட்டங்களை நடத்தி விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுரை கூறி வருகின்றனர்.
தருமபுரி நகரில் சமூக இடை வெளியைப் பின்பற்றாத 2 செல் போன் கடைகள் உட்பட 3 கடை களுக்கு தருமபுரி வட்டாட்சியர் சுகுமார் தலைமையிலான குழுவினர் சீல் வைத்துள்ளனர்.
40% கடைகள் திறப்பு
கரோனா பாதிப்பு இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக இருப்பதால், சில நிபந்தனைகளுடன் நேற்று முதல் கடைகள் திறக்கப்பட்டன. குறிப்பாக மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகள், பேன்சி கடைகள், எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகள் என 40 சதவீதம் கடைகள் திறக்கப்பட்டன.