ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி நேற்று சந்தித்து, தமிழக அரசு எடுத்து வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். இந்த சந்திப்பில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர். 
தமிழகம்

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

செய்திப்பிரிவு

ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்தை நேற்று மாலை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோ சனை நடத்தினார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊர டங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 527 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள் ளனர். குறிப்பாக கடந்த சில தினங் களாக கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள், கடை உரிமையாளர்கள், பொது மக்கள் என நூற்றுக்கணக்கான வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கரோனா பாதித்தவர்கள் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில், நேற்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்தார். வழக்கமாக மாதம் தோறும் தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு விவரம் மற்றும் மாநில பிரச்சினைகள் குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அறிக்கை அளிப்பார். சில நேரங்களில் நேரில் சென்றும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து அறிக்கை அளிப்பார்.

தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ கத்தின் நிலை குறித்து விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள் ளது. இதையடுத்தே, ஆளுநரை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

மாநிலத்தில் தற்போதைய கரோனா பாதிப்பு நிலை, கட்டுப் படுத்த எடுக்கப்பட்டு வரும் நட வடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதல்வர் பழனிசாமி விளக்கியுள் ளார். தொடர்ந்து, மத்திய அரசிடம் ரூ.12 ஆயிரம் கோடி நிதி கேட்டுள்ளது குறித்தும் மத்திய குழுவினர் சென்னையில் நடத்தி யுள்ள ஆய்வு, அவர்களிடம் தமிழகம் சார்பில் எடுத்து வைக் கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித் தும் ஆளுநரிடம் முதல்வர் பழனி சாமி எடுத்து கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதுதவிர, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் சிறிதுநேரம் ஆலோ சனை நடத்தியதாகவும் கூறப் படுகிறது. இந்த சந்திப்பின்போது, அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கே.சண் முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி மற் றும் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT