கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடலோர காவல்படையினர் நடுக்கடலில் சிக்னல் வெடி வெடித்து நன்றி தெரிவித்தனர்.
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள மருத்கவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினருக்கு நன்றி செலுத்தும் வகையில் பாதுகாப்பு துறை சார்பில், கரோனா நோயாளிகள் சிகிச்சைபெறும் மருத்துவமனைகளின் மீது நேற்று ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
அதேபோன்று தூத்துக்குடியிலும் கடலோர காவல்படை சார்பில் நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் கடலோர காவல்படைக்கு சொந்தமான ஆதேஷ், அபிராஜ் ஆகிய 2 ரோந்து கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
அந்த கப்பல்கள் மின்விளக்குகளால் ஜொலித்தன.தொடர்ந்து ஆபத்து காலத்தில் ஒளிரச்செய்யக்கூடிய சிக்னல் லைட்டிங் வெடிகளை கடலோர காவல்படையினர் வெடிக்க செய்தனர். இதனால் நடுக்கடலில் வாணவேடிக்கை போன்று காட்சி அளித்தது.