தமிழகம்

பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நெல்லை வருவோரை கண்டறிய தன்னார்வலர்கள்

செய்திப்பிரிவு

பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருநெல்வேலிக்கு வரு பவர்களைக் கண்டறியவும், அவர்களைத் தனிமைப்படுத்தவும் வார்டுக்கு 2 தன்னார்வலர்கள் வீதம் 55 வார்டுகளுக்கும் 110 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வெளியூரில் இருந்து வரும் நபர்கள் பற்றி மாநகராட்சி இலவச தொலை பேசி எண் 1800 425 4656-க்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அத்துடன், திருநெல்வேலி பேட்டையில் மாநகர எல்லையில் போலீஸார் கண்காணிப்பு கோபுரம் அமைத் துள்ளனர்.

இதேபோல், தூத்துக்குடியில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் யாரும் தற்போது இல்லை.

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து எவரேனும் வந்தது தெரிய வந்தால் மாநகராட்சி கரோனா தொற்று கட்டுப்பாட்டு அறைக்கு (தொலைபேசி எண் 0461-2326901) தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT