மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங் கள், சுவாமி வீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அனைத்து பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையிலும், ஆத்ம திருப்திக் காகவும் திருக்கல்யாண சம்பிர தாயங்கள் மட்டும் இன்று (மே 4) காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள உற்சவ மூர்த்திகள் எழுந்தருளும் சேத்தி மண்டபத்தில் (உற்சவர் சன்னதி) நான்கு சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறி முறைகளைப் பின்பற்றி நடத்தி வைப்பார்கள்.
திருக்கல்யாண நிகழ்ச்சி காலை 8.30 மணியளவில் விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி10.15 மணியளவில் நிறைவுபெறும்.
திருக்கல்யாண உற்சவத்தின் போது திருமாங்கல்ய மங்கல நாண் அணிந்துகொள்ள விரும்பும் தாய்மார்கள் காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிரார்த்தித்து புதிய மங்கலநாண் மாற்றிக் கொள்ள உகந்த நேரமாகும்.
கோயிலுக்குள் பக்தர் கள் மற்றும் பொதுமக்கள் வருவதற்கு தடையுள்ள நிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான www.tnhrce.gov.in திருக்கோயில் இணையதளமான www.maduraimeenakshi.org முகநூல் https://www.facebook.com/mmtemple/videos/2941159102671100 பக்கத்திலும் மற்றும் கோயில் https://www.youtube.com/channel/UCotoThflBesJ993PqjwEtRA/live youtube அலைவரிசையிலும் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பிரார்த் தித்து தரிசனம் செய்யலாம்.