தமிழகம்

கரோனா களப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து புதுச்சேரி கடற்கரையில் வானவேடிக்கை, இரவு முழுக்க ஜொலிப்பு

செ.ஞானபிரகாஷ்

கரோனாக்கு எதிராக போராடும் களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து இந்திய கடலோர காவல்படை சார்பில் புதுச்சேரி கடற்கரையில் பச்சை நிறத்தில் வானவேடிக்கை விடப்பட்டது.

இரவு முழுவதும் கப்பலில் பச்சை நிற விளக்குகளும் ஒளிர்ந்தது.

கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நோய்க்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு முப்படை சார்பில் நன்றி இன்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி புதுச்சேரியில் இந்திய கடலோர காவல்படையின் கப்பல் மூலம் இன்று மாலை பச்சைநிற வான வேடிக்கை விடப்பட்டது. புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே இந்திய கடலோர காவல்படையின் கப்பலிலிருந்து பச்சைநிற வாணவேடிக்கை நடந்தது. அத்துடன் வெடி வெடித்தும் சைரன் ஒலித்தும் கரோனாவிற்கு எதிராக போராடும் களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வான வேடிக்கையும் நடத்தப்பட்டது.

இந்திய கடலோர காவல்படையினர் கூறுகையில், இரவு முழுவதும் கப்பலில் பச்சை நிறத்தில் விளக்குகளை எரியவிடப்பட்டு ஜொலித்தது. நாடு முழுவதும் 7ஆயிரத்து 516 கிலோமீட்டர் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படை சார்பில் 50 கப்பல்களில் பச்சைநிற வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது" என்று குறிப்பிட்டனர். .

SCROLL FOR NEXT