திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி கரோனா வார்டில் பணிபுரிந்துவிட்டு கோவில்பட்டி திரும்பிய 2 செவிலியர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சி அத்தைக்கொண்டானை சேர்ந்த ரமா ஜெகன்மோகன், சரவண செல்வி ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இவர்கள் கரோனா சிறப்பு பிரிவு வார்டில் பணியாற்றி, 14 நாட்கள் அங்குள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்து, ரமா ஜெகன்மோகன், சரவண செல்வி ஆகியோர் இன்று காலை கோவில்பட்டி அருகே அத்தைக்கொண்டானில் உள்ள வீட்டுக்கு வந்தனர்.
அவர்களுக்கு இனாம் மணியாச்சி விலக்கு அருகே கோவில்பட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து தாம்பூலத்தில் பழங்கள் வழங்கி, கைதட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில், இனாம்மணியாச்சி ஊராட்சி தலைவா் ஜெயலட்சுமி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.