தென்காசியில் ஒரு வாரத்துக்கு பிறகு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புளியங்குடியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 38 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில், 12 பேர் குணமடைந்தனர்.
கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இந்நிலையில், புளியங்குடியைச் சேர்ந்த 43 வயது பெண், 52 வயது ஆண் என 2 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 37 பேர் புளியங்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புளியங்குடியைச் சேர்ந்த 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.