கோவை, வேலாண்டி பாளையத்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி.
10 வயது சிறுவன், 43 வயது பெண், 62 வயது ஆண் என 3 பேருக்கு பாதிப்பு உள்ளது தெரிந்தது.
சில வாரங்களுக்கு முன் கேரளா மாநிலம் மலப்புரத்துக்கு இவர்கள் சென்று வந்தனர். தற்போது மீண்டும் கேரளா செல்வதற்காக, தாங்களாகவே கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதித்துக் கொண்டனர். அதில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி என முடிவு வந்துள்ளது.
இவர்கள் வசித்த பகுதியை தனிமைப்படுத்தி, நோய் தடுப்பு நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனால் கோவையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 142 ல் இருந்து 145 ஆக உயர்ந்தது.
முன்னதாக கரோனா பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் பட்டியலில் கோவையை சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்துக்கு மத்திய அரசு மாற்றியது. கோவை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக புதிதாக யாரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை.
இதையடுத்து, மத்திய அரசு, கரோன பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் பட்டியலில் கோவையை சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியது.
இந்நிலையில் இன்று மீண்டும் 3 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மீண்டும் சிவப்பு மண்டலத்துக்கே திரும்புகிறது.