விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் முதல் மதுரை மாவட்டம், பேரையூர் அருகே மல்லபுரம் வனப்பகுதி வரை யுள்ள சாம்பல் நிற அணில் சரணாலயப் பகுதியில் யானை, மான், மிளா, காட்டெருமை, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.
இந்த ஆண்டுக்கான வனவிலங் குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த பிப்ரவரி 29-ம் தேதி தொடங்கியது.
வனவிலங்குகளி்ன் கால் தடங்கள், எச்சங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் கணக்கெடுக்கும் பணியில் 40 குழுக்கள் ஈடுபட்டன. ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் பகுதியிலிருந்து மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள மல்லபுரம் வரையுள்ள சுமார் 480 சதுர கி.மீ.தூரத்துக்கு இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில், விருதுநகர் மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள், சிறுத்தைகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.