வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள்(67). இவர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலை திண்டுக்கல் நாகல் நகரில் உள்ள இல்லத்தில் காலமானார்.
இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சர வைக் கூட்டத்தில் பங்கேற்ற திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக திண்டுக்கல் திரும்பினார்.
அமைச்சர் திண்டுக்கல் சி.சீனி வாசன், கண்ணாத்தாள் தம்பதிக்கு ராஜ்மோகன், வெங்கடேஷ், பாலு ஆகிய மகன்களும், லட்சுமி, தனம் ஆகிய மகள்களும் உள்ளனர்.
கண்ணாத்தாள் உடலுக்கு அதி முக எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், தேன்மொழி, திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரிய சாமி, இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் இரங்கல்
திண்டுக்கல் சீனிவாசனுக்கு முதல்வர் பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தங்கள் மனைவி கண்ணாத்தாள் உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இறை வன் அளிக்க வேண்டும். தங்கள் மனைவியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனக் கூறி உள்ளார்.
அதிமுக சார்பில் ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், கட்சியின் அமைப்பு செயலாளரான திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி மறை வுக்கு இரங்கல் தெரிவித்தனர்.