தமிழகம்

கடும் நிதி நெருக்கடியை சமாளிக்கவே பத்திர பதிவு அலுவலகம் திறப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

ஊரடங்கு காலகட்டத்தில் அரசுக்குஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியை சமாளிக்கவே பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுஅலுவலகங்களை திறக்க அனுமதியளித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரிமதுரையைச்சேர்ந்த செந்தில் வேல்முருகன், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர் வில் நடந்தது. அப்போது அரசு தரப்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராய ணன் ஆகியோர் ஆஜராகி, ‘‘தற்போதுள்ள இக்கட்டான சூழலில் அரசுக்கு ஏற்பட்டுள்ள கடும் நிதிநெருக்கடியை சமாளிக்க பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு மிகவும் அவசியமானது. மேலும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி தேவைக்கும், கடனுதவி பெறவும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது’’ என வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், பத்திரப்பதிவு அலுவலகங்களில் சமூகஇடைவெளியை கடைபிடிக்கவும்,பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர். மேலும் ஏதேனும் புகார்கள் வந்தால், அதை அந்த துறை அதிகாரிகளே சட்டத்துக்கு உட்பட்டு உடனுக்குடன் பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

SCROLL FOR NEXT