கரோனைவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவிக்கையில் ‘‘கரோனா வைரஸ் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு ஆணை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாது. இதுவே கடைசி நீட்டிப்பாக அமைய வேண்டுமானால், அனைவரும் மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை மதித்து நடக்க வேண்டும்!’’ எனக் கூறியுள்ளார்.