தமிழகம்

ஜல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டதால் காவிரி மேலாண்மை ஆணையம் மேலும் வலுப்படும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விளக்கம்

செய்திப்பிரிவு

ஜல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டதால் காவிரி மேலாண்மை ஆணையம் மேலும்வலுப்படும் என்று தமிழக பாஜகதலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஒரு துரும்பைக்கூட நகர்த்தாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் காவிரி மேலாண்மைஆணையம் கொண்டுவரப்பட்டதை விமர்சித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தை மேலும் வலுவாக்கவே ஜல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டு்ள்ளது. கரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்துவரும் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களிடம் ஆதரவு பெருகுவதால் ஏற்பட்ட விரக்தியில் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார்.

ஜல்சக்தி அமைச்சகத்துடன் காவிரி ஆணையம் மட்டுமல்லாதுகோதாவரி, கிருஷ்ணா ஆணையம் உள்ளிட்ட 7 ஆணையங்கள் இணைக்கப்பட்டு்ள்ளன. இதனால் அதிகாரம் பறிக்கப்படுவதாக இருந்தால் மற்ற ஆணையங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும். ஆனால் யாரும் எதிர்க்கவில்லை. எனவே, திமுகவின் அரசியலை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT