கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான குடும்ப மற்றும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக அறியப்படுகிறது.
பாலியல் மற்றும் குடும்ப வன்முறையில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் தங்கள் புகார்களை தங்கள் பகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடி பணியாளர்களிடம் நேரிலோ, அலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம். அங்கன்வாடி பணியாளர்களின் அலைபேசி எண்கள் (icds.tn.nic.in) என்ற இணையதளத்தில் உள்ளது.
மேலும், தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலரை 8220387754, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகியை 8667344764, பெண்களுக்கான இலவச உதவி எண் 181 மற்றும் 1091, 112 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
குடும்பநல ஆலோசனைகளுக்கு 8098777424, 9943632676, 8056804920, 9444710251 என்ற எண்களில் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.
உதவி கோரும் பெண்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுந்த ஆலோசனைகள் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.