தமிழகம்

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நடைபாதைகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதி களுடன் தங்கும் இடங்கள் அமைத்தல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மெரினா கடற் கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில செயலாளர் லீலாவதி தலைமை வகித்தார். கட்டிடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தின் கூடுதல் செயலாளர் ஆர்.கீதா முன்னிலை வகித்தார். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 130 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ரூ.5 லட்சம் விபத்து நிவாரணம்

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், அமைப்பு சாரா தொழிலாளிகளுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதி, பணப் பயன்கள் அதிகரித்தல், நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் ஓய்வூதியம், மகப்பேறுகால உதவி, திருமண உதவி, ரூ.5 லட்சத்துக்கு விபத்து நிவாரணம் ஆகியவற்றை வழங்க வேண்டும். நடைபாதைகளில் வசிக்கும் மக்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அருகிலேயே அடிப்படை வசதிகளுடன் தங்கும் இடங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

          
SCROLL FOR NEXT