‘‘சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்த பகுதிகள் உட்பட 17 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன,’’ என மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதையும் மீறி பலர் தேவையின்றி சாலைகளில் திரிகின்றனர். அவர்களை கண்காணித்து எச்சரிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 17 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் கரோனா அதிகம் பாதித்த திருப்பத்தூரில் புதுத்தெருவில் 2 இடங்கள், அச்சுக்கட்டு பகுதியில் ஒன்று, திருக்கோளக்குடி பகுதியில் ஒன்று என 4 இடங்களில் 11 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுவிர மாவட்ட எல்லையான பூவந்தி, மணலூர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு மேராக்களில் பதிவாகும் காட்சிகளை இணையம் மூலமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடியே அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.
மேலும் தேவையான உத்தரவுகளையும் அந்தந்த பகுதி அதிகாரிகளுக்கு பிறப்பிக்க முடியும். இதன்மூலம் பொதுமக்கள் தேவையின்றி நடமாடுவதை தவிர்க்க முடியும் என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.