கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தம் 9 பேர் தொற்றுக் காரணமாக சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகரத்தை ஒட்டிய ஏமப்பேர் பகுதியில் சுகாதாரத்துறையில் மேற்கொண்டு வரும் பரிசோதனையின் மூலம் 2 ஆண் மற்றும் 1 பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மூவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து அண்மையில் திரும்பியவர்கள் எனக் குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தெரிவிக்கையில், மாவட்டத்தில் தற்போது வரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பூரண குணடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். எஞ்சிய 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதி தற்போது கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, தீவிர கண்காணிப்பும், கிருமி நாசினி தெளிப்பும், அப்பகுதி மக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.