மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் கரோனா நோய் தடுப்பு பிரிவில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட் களை வழங்கினார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். 
தமிழகம்

செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

செய்திப்பிரிவு

மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பு சிறப்புப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்கள் உட்பட 150 மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

இப்புனித சேவையில் ஈடுபட்டு வருவோர் கடவுளுக்கு இணையானவர்கள் என முதல்வர் ஏற்கெனவே பாராட்டியுள்ளார்.குடும்பத்தை மறந்து வீட்டுக்குச் செல்லாமல் பணியாற்றுவது மகத்தானது. உங்களுக்கு என்றைக்கும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும். மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது ஆட்சியர் டிஜி.வினய், மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT