தமிழகம்

மது குடித்துவிட்டு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்: ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்

செய்திப்பிரிவு

அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு வந்து பாடம் நடத்துவதாக, மாணவர்கள் தங்களின் பெற் றோர்களுடன் வந்து ஆட்சியரிடம் நேற்று புகார் மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

கீழக்கரை அருகே லெட்சுமிபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு லெட்சுமிபுரம், ஸ்ரீநகர் பகுதிகளைச் சேர்ந்த 74 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் சிலர், தினமும் மது அருந்திவிட்டு வந்து பாடம் நடத்துகின்றனர். கழிப்பறையில் போடும் மது பாட்டில்களை மாணவர்களை சுத்தம் செய்யச் சொல்கின்றனர். இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்ற ஆட்சியர் விசாரணை நடத்த முதன்மைக்கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT