தமிழகம்

இவர் நம்ம வாசகர்- ஒரு வழக்கறிஞரின் ‘இந்து தமிழ்’டைரி...

செய்திப்பிரிவு

‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளியான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர் களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது. இன்று மதுரை சிட்டம்பட்டி முகவர் எம்.கண்ணன் பேசுகிறார்...

புதுத்தாமரைப்பட்டியில இ.பினேகாஸ்னு ஒரு வக்கீல் இருக்காரு. வெறித்தனமான ‘இந்து தமிழ்’ வாசகர். தன்னோட வீட்டுக்கு, அலுவலகத்துக்கு, கடச்சனேந்தலில் இருக்கிற அம்மா வீட்டுக்குன்னு மூணு பேப்பர் வாங்குறாரு. “எப்படி சார் இப்படி?” என்று கேட்டால் காரணத்தை அடுக்கிக்கிட்டே போவார்.

“என் சொந்த ஊரு நெல்லை மாவட்டம் மாஞ் சோலை எஸ்டேட். அப்பா கும்கி யானைப் பாகன். மலைப்பகுதிங்கிறதால பேப்பர் மூலம்தான் வெளி உலகத்துல என்ன நடக்குதுன்னே தெரிஞ்சுக்க முடியும். பாளையங்கோட்டையில நான் ஸ்கூல் படிக்கும்போது, லீவுல ஊருக்குப் போனா 3 நாள் பழைய பேப்பரை வெச்சி படிச்சிட்டு இருப்பாங்க. அப்ப ஆரம்பிச்ச பேப்பர் படிக்கிற பழக்கம் இப் பவும் தொடருது. ஆபீஸ்க்கு ஏன் ‘இந்து தமிழ்’ வாங்கு றேன்னா, என்னோட ஜூனியர்கள் 2 பேரையும் அதை வாசிக்கச் சொல்வேன். ‘இந்து தமிழ்’ செய்திகளைக் குறிப்பெடுக்க ஒரு டைரி வெச்சிருக்கேன். கரு ணைக்கொலை குறித்த ஒரு விவாதத்துக்கு ‘இந்து’வில் வந்த ஒரு செய்திதான் உதவியாக இருந்தது. ஹைகோர்ட்ல ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி வைத்தபோது, ‘நூல்வெளி’, ‘ஞாயிறு அரங்கம்’ பக்கத்தில் இருந்து எடுத்த குறிப்புகளைச் சொல்லியே முதல் பரிசு வாங்குனேன். சீமைக்கருவேல மரம் குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். அதை நடுப்பக்கத்தில் பிரசு ரித்து என்னை ஊக்கப்படுத்தியது இந்து தமிழ் நாளிதழ்” என்றார்.

இந்து தமிழுக்கு கிடைத்திருக்கும் வாசகர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

SCROLL FOR NEXT