சுதந்திர தினத்தையொட்டி முக்கியப் பிரமுகர்களுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் ஆளுநர் கே.ரோசய்யா நேற்று பகல் 11 மணிக்கு ராஜ்பவனில் தேநீர் விருந்து கொடுத்தார். இதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை.
மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்கள் கோபாலகிருஷ்ண காந்தி, எம்.கே.நாராயணன், ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன், தமிழக அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.வைத்தியநாதன், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயரதி காரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தொழிலதி பர்கள், கல்வியாளர்கள், முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின கொண்டாட் டத்தின் அடையாளமாக மூவர்ண பலூன்களை ஆளுநர் ரோசய்யா பறக்கவிட்டார். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த ஆளுநர், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கவர்னரின் முதன்மைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, துணைச் செயலாளர் கே.வி.முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.