தமிழகம்

கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிருப்தி

ஜெ.ஞானசேகர்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 5,700 டாஸ்மாக் கடைகளில் மேற் பார்வையாளர்கள், விற்பனை யாளர்கள், உதவி விற்பனையாளர் கள் என 26,000-க்கும் அதிகமா னோர் பணியாற்றி வருகின்றனர்.

ஊரடங்கையொட்டி டாஸ் மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில், கடையை உடைத்து மதுபானங் கள் திருடு போனதால், டாஸ் மாக் கடைகளில் இருந்த மது பானங்கள் பாதுகாப்பான கட்டி டங்களுக்கு மாற்றப்பட்டு, சீல் வைக்கப்பட்டன.

இதன்படி, திருச்சி மாவட்டத் தில் உள்ள 183 கடைகளிலும் இருந்த மதுபானங்கள் 5 இடங் களில் பிரித்து வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர் களும் சுழற்சி முறையில் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

இவ்வாறு திருச்சி கலையரங் கம் பழைய திருமண மண்டபத் தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்த டாஸ்மாக் மேற் பார்வையாளர் பி.ராஜேந்திரன் என்பவர், ஏப்.21-ம் தேதி வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கூறியது:

கூடுதல் பாதுகாப்பு தேவை யெனில் தனியார் செக்யூரிட்டி நிறுவன ஆட்களை பணியமர்த்த லாம். அதைவிடுத்து தற்காப்பு பயிற்சி ஏதுமில்லாத, எவ்வித ஆயுதமும் கையாள அனுமதி இல்லாத டாஸ்மாக் ஊழியர் களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும். திருச்சியில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டு மார டைப்பால் உயிரிழந்த பி.ராஜேந் திரன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்களில் கேட்ட போது, “மதுபானங்களுக்கு அந்தந்த கடை ஊழியர்கள்தான் பொறுப்பு. இதனடிப்படை யில்தான் போலீஸாருடன் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்ற னர். ஒருவருக்கு வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே பணி வரும்.

பணிக்காலத்தில் ஊழியர் கள் இறந்தால் அவரது குடும்பத்தி னருக்கு உரிய பணப் பலன்கள் வழங்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT