தமிழகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றின்  3-ம் கட்ட நிலையில் நுழைந்துவிட்டோம்: மக்களுக்கு ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டத் தில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. அவர்களில் 10 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வைரஸ் தொற்று 3-ம் கட்டத்தை அடையக் கூடாது என்பதற்காக அனைவரும் உழைத்த நிலை யில், சுகாதாரத் துறையில் பணி யாற்றும் ஒருவருக்கு தொற்று ஏற் பட்டுள்ளது. 3-ம் கட்ட நிலைக்கு செல்வதற்கு இது முதல் படியாகும். வெளிநாடு சென்று நாடு திரும்பிய 20 பேரது வீடுகளை கண்காணிக்கும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார்.

மருத்துவக் கண்காணிப்பு முடி யும்போது அனைவரது மாதிரி களும் சேகரிக்கப்பட்டு பரி சோதனை செய்யப்பட்டது. அதில், இவரைத் தவிர யாருக்கும் நோய் தொற்று இல்லை. இவருக்கு யாரிடம் இருந்து நோய் தொற்று ஏற் பட்டது என கண்டுபிடிக்க முடிய வில்லை.

இதுபோன்ற நிலையை தவிர்க்க வேண்டும் என்பதற்காகதான், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்; பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். உங்களை துன்புறுத் துவதற்காக அல்ல. நிரந்தரமாக மகிழ்ச்சியாக வைத்திருக்கவே இந்த நடவடிக்கை. ஜவ்வாது மலை யில் வாழும் மலைவாழ் மக்கள் கிராமத்தின் நுழைவு பகுதியில் தடுப்பு அமைத்து கட்டுப்பாடுடன் உள்ளனர்.

அதுபோன்ற நிகழ்வைதான் அனைத்து பகுதிகளிலும் எதிர்பார்க் கிறோம். வெளி நபர்களை கிராமத் தின் உள்ளே அனுமதிக்காதீர்கள். மே மாதம் 3-ம் தேதி வரை கட்டுப் பாடுகளை கடுமையாக பின்பற்றி னால்தான் விடியல் பிறக்கும். இல்லையென்றால் இந்த நிலை தொடரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்” என அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT