விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸார் கரோனா நிவாரண நிதியாக ரூ.43 லட்சம் வழங்கினர்.
கரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து விடுபட கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினர் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள் உட்பட 2,967 பேரின் ஒரு நாள் ஊதியமான 43 லட்சத்து 308 ரூபாயை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாக எஸ்.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விவசாயப் விளைபொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு வழியில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள மாவட்ட குற்ற காப்பக ஆவண ஆய்வாளர் பூங்கோதையை 94981 06381 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.