செய்தி சேகரிப்பின் போது பத்திரிகையாளர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வருவாய் ,பேரிடர் மேலாண்மை, மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆர்.ப உதயகுமார் கூறியதாவது:
மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், நடந்து கொண்டது மிகவும் கவலை அளிக்கிறது
கரோனா நோய்த் தொற்று தொடங்கிய நிலையில், நான் பலமுறை சமூக விலகலைக் கடைபிடிக்குமாறு பத்திரிகையாளர்களுக்கும் அறிவுறுத்தி வருகிறேன். இனியாவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, பத்திரிகையாளர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், தாங்கள் செய்தி சேர்க்கும்போது சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் தொடர்ந்து கவனக்குறைவாக நடந்து கொள்வது தங்களுக்கு இந்த தொற்றை ஏற்படுவது மட்டுமின்றி தங்கள் குடும்பத்தாருக்கும் தொற்று ஏற்படும் அபாயத்தை உருவாக்கும்.
ஆரம்ப நிலையிலேயே நான் உங்களிடம் வேண்டுகோள் வைத்தது போல, மீண்டும் தங்களிடம் இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
கரோனா என்ற தொற்று நோய் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, மருத்துவப் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றி, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி கிருமி நாசினியால் கழுவி சுத்தப்படுத்திக் கொள்வது போன்ற கட்டாயமான மருத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகளை, பத்திரிகையாளர்கள் தவறாது கடைபிடிக்கே வேண்டும்.
செய்தி சேகரிப்பைவிட தங்களது பாதுகாப்புதான் முக்கியம் என்பதை உணர்ந்து நீங்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று நான் இரு கரம் கூப்பி வணங்கி வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.