கொடைக்கானல் பூம்பாறை அருகே விளைந்துள்ள பிளம்ஸ் பழங்கள். 
தமிழகம்

கொடைக்கானலில் தொடங்கியது ‘பிளம்ஸ்’ சீசன்- கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நஷ்டம்

செய்திப்பிரிவு

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் பரவலாக பிளம்ஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை விளைச்சல் கிடைக்கும். தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது. எதிர்பார்த்ததைவிட விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால் அறுவடை செய்யப்படும் பழங்களை விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் எழுந் துள்ளது.

இங்கு விளையும் பிளம்ஸ் பழங்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்குத்தான் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும்.

தற்போது ஊரடங்கால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட் டுள்ளதால், பிளம்ஸ் பழங்களை கொள்முதல் செய்ய வெளிமாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், வெளிமாநிலங் களுக்கும் அனுப்ப முடியவில்லை, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி மறுக்கப் பட்டுள்ளதால் உள்ளூரிலும் அதிக அளவில் விற்பனையாகவில்லை.

கடந்த ஆண்டு இதே சீசனில் ஒரு கிலோ பிளம்ஸ் பழம் ரூ.120-க்கு விற்பனையானது.

ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.50-க்கு விற்றாலும் வாங்குவதற்கு யாரும் இல்லை. விலைவீழ்ச்சியால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.

SCROLL FOR NEXT