மருத்துவர் பரிந்துரை இல்லாமல் காய்ச்சல், தலை வலிக்கு மருந்து வழங்க மருந்தகங்களுக்கு தடை விதித்து மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜிவ்காந்தி, விஜயலட்சுமி கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி காய்ச்சல், தலைவலிக்கு பலர் மாத்திரை, மருந்து வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் காய்ச்சல், தலைவலிக்கு மருந்து வாங்கி சாப்பிட்டால் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியாமல் போவதோடு, நோய் தீவிரமாகி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் காய்ச்சல், தலைவலி, சளி, தொண்டை வலி, இருமல் உள்ளிட்டவற்றுக்கு மருந்துகள் வழங்கக் கூடாது என மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருந்துகளை வழங்கும் போது, அவர்களது முகவரி, செல்போன் உள்ளிட்டவற்றை மருந்தகங்களில் பெற வேண்டும். இதனை பராமரித்து, மருத்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.