தமிழகம்

மதுவிலக்கு கோரி ஆக.10-ல் திமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்: கருணாநிதி

செய்திப்பிரிவு

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி வரும் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று 21-7-2015 அன்று நான் அறிவித்திருந்தேன்.

இருந்த போதிலும், தமிழகமெங்கும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன் .

இதன் தொடர்ச்சியாக, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை பிரதிபலித்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10-8-2015 திங்கள்கிழமையன்று மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT