தமிழகம் முழுவதும் 5 லட்சத்து47 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிலோஃபர் கபீல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கு முதல்வர் அறிவிப்பின்படி ரூ.1,000 கரோனா நிவாரணத் தொகை 12 லட்சத்து 97 ஆயிரத்து 382 தொழிலாளர்களுக்கு ரூ.129 கோடியே 73 லட்சம் ஒதுக்கப்பட்டு, ஏப். 20 வரை 5 லட்சத்து47 ஆயிரத்து 427 தொழிலாளர்களுக்கு அவர்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. வங்கிக்கணக்கு அளிக்காத வர்களின் விபரங்கள் பெறப்பட்டு, அவர்கள் வங்கிக்கணக்கில் நிவாரணத் தொகை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உடலுழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்ட 14 இதர நலவாரியங்களில் பதிவு பெற்ற 14 லட்சத்து 7 ஆயிரத்து 130 தொழி லாளர்களுக்கு ரூ.1,000 வீதம் ரூ.140 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டு அவர்கள் வங்கிக்கணக்கில்ஏப்.21 முதல் செலுத்தப்பட உள்ளது. மேலும், இந்த தொழிலாளர்களுக்கு 2-வது தவணையாக ரூ.1,000 வழங்க ஏப்.17-ல் அரசாணை வெளியிடப்பட்டு வங்கிக்கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
அதேபோல், பேரவையில் முதல்வர் அறிவித்தபடி, கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாராஓட்டுநர்கள், ஓய்வூதியர்கள், வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்கள் என 14 லட்சத்து 57 ஆயிரத்து 526 பேருக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏப்.20 வரை 5 லட்சத்து ஆயிரத்து 14 பேருக்கு இந்த உணவு தொகுப்பு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. மீத முள்ள தொழிலாளர்களுக்கு ஓரிருதினங்களில் வழங்க மாவட்ட ஆட் சியர், கூட்டுறவு, உணவுத் துறை அதிகாரிகளுடன் தொழிலாளர் துறை அலுவலர்கள் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
நிவாரணத் தொகை பெறாத வர்கள் தங்கள் வங்கிக்கணக்கு எண்ணை தொழிலாளர் உதவி ஆணையரிடம் அளித்தால் விரைவில் நிவாரணத் தொகை வழங் கப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.