கரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள் உட்பட அனைத்து களப்பணியாளர்களுக்காக தொழிலாளர்கள் நாளைய தினம் ஒற்றுமை தினத்தை கடைபிடிக்க வேண்டும் என பிஎம்எஸ் தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கா.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
‘‘பாரதீய மஸ்தூர் சங்கத்தின் அனைத்து உறுப்பு தொழிற்சங்கங்ககளும் நாளைய தினம் (22 ஏப்ரல் 2020) புதன்கிழமை அன்று கரோனா வைரஸை எதிர்த்து போராடும் மருத்துவர்கள் உட்பட அனைத்து களப்பணியாளர்களுகாக ஒற்றுமை தினத்தை கடைபிடிக்கிறது.
இதன்படி நாளை மாலை 04.00 மணிக்கு ஊரடங்கு உள்ள பகுதிகளில் தொழிலாளர்கள் தங்கள் வீடுகள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் அலுவலகங்களில் இப்பணியில் இன்னுயிரை தந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும்.
பின்னர் கரோனாவை கட்டுபடுத்த உழைத்து வரும் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர;கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், வங்கி ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் உட்பட அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு மரியாதை மற்றும் வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டும்
அனைத்து உறுப்பு தொழிற்சங்கங்களுக்கும் இதை தெரிவித்து உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து அதிக அளவில் இந்நிகழ்ச்சியை நடத்திட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.