கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வை சுமார் 11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி னர். தேர்வு முடிவு கடந்த மே 21-ம் தேதி வெளியிடப்பட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 29-ம் தேதி அந்தந்த பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட் டன. தற்காலிக மதிப்பெண் சான் றிதழ் 3 மாதங்களுக்கு செல்லத்தக் கது ஆகும். அதன்படி, ஆகஸ்ட் 21-ம் தேதி வரை அந்த சான்றிதழ்களை பயன்படுத்திக்கொள்ளலாம். எனி னும், மாணவர்களின் நலனைக் கருத் தில்கொண்டு இக்காலக்கெடுவுக்கு முன்னரே அசல் மதிப்பெண் சான் றிதழ்களை வழங்க அரசு முடிவு செய்தது.
அதன்படி, எஸ்எஸ்எல்சி தேர் வெழுதிய அனைத்து மாணவர் களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 5-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் எஸ்எஸ்எல்சி முடித்த மாணவ-மாணவிகளுக்கு நேற்று அசல் மதிப் பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட் டன. தனித் தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.