தமிழகம்

விசுவாமித்திரர் கோயிலில் விஜயகாந்த் தியான வழிபாடு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விசுவாமித்திரர் கோயிலில், தனது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு தியானம் செய்தார்.

நட்சத்திரப்படி விஜயகாந் துக்கு நேற்று பிறந்தநாள். நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகில் உள்ள விஜயாபதி கிராமத்தில், விசுவாமித்திரருக்கு கோயில் உள்ளது. இக்கோயி லுக்கு தனது மனைவி பிரேம லதாவுடன் நேற்று அதிகாலை யிலேயே விஜயகாந்த் வந்தார். கோயிலில் சிறப்பு சுவாமி தரிசனம் செய்த அவர், அங்கு தியானத்தில் ஈடுபட்டார். கட்சிக் காரர்கள் மற்றும் பத்திரிகை யாளர்கள் அப்போது அங்கு அனுமதிக்கப்படவில்லை.

திரிசங்கு மன்னனுக்காக தனது தவத்தின் பயனால் தனி சொர்க்க லோகத்தை உருவாக்கியவர் விசுவாமித்திரர். ராஜரிஷி என பெயர்பெற்ற இவருக்கு கோயில் அமைந்துள்ள சொற்ப இடங் களில் விஜயாபதியும் ஒன்று. பிரசித்திபெற்ற இக்கோயிலில் சுவாமி தரிசனத்துக்குப் பின், தியானம் புரிந்தால் நினைத்தது கைகூடும், கோபம் அடங்கி பொறுமை வரும் என்பது நம்பிக்கை.

SCROLL FOR NEXT