அதிமுக செய்தித் தொடர்பாள ராக வா.புகழேந்தி நியமிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை, அதிமுக ஒருங்கிணைப் பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ்ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளராக இருந்தபோது, கர்நாடக மாநில அதிமுக செய
லாளராக புகழேந்தி செயல்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப்பின், சசிகலா ஆதரவாளராக மாறினார். அதன்பின், தினகரனு டன் இணைந்து செயல்பட்டார்.
அமமுகவை தினகரன் தொடங்கியபோதும் அவருடன் இருந்த புகழேந்தி, பின்னர் ஏற் பட்ட கருத்து வேறுபாடால் அக்கட்சியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில்அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், அதிமுகவின் செய்திதொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.